20th of September 2013
சென்னை::ஆடுகளம்’, ‘வந்தான் வென் றான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. ‘அரவான்’, ‘மிருகம்’ போன்ற படங்களில் நடித்தவர் ஆதி. இவர்கள் இருவரும் ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது முதல் இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகின்றனர். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, படங்களில் நடிக்க ஆதிக்கு சிபாரிசு செய்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி டாப்ஸி கூறியதாவது:
ஆதியை காதலிப்பதாக கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. நாங்கள் சந்தித்து வெகுநாள் ஆகிவிட்டது. நீண்ட நாளுக்கு முன்பு ஆதியை ஐதராபாத்தில் சந்தித்தேன். அவ்வளவுதான். அதன்பிறகு சந்திக்கவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர். இதைதவிர எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. எதிர்காலத்திலும் யாரையும் காதலிக்கும் எண்ணம் இல்லை. தற்போது பிஸியாக நடித்து வருவதால் டிசம்பர் வரை புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு முன்பு இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதற்கான ஒத்திகையில் விரைவில் பங்கேற்க உள்ளேன்.
Comments
Post a Comment