10th of September 2013
சென்னை::இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி
வைக்கிறார். விழாவில், ஜனாதிபதி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள்
பங்கேற்கின்றனர்.
சென்னையில் நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண், தமிழ்த்
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் கூறியதாவது:
இந்திய சினிமா
நூற்றாண்டு விழா, சென்னையில், வரும், 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, நேரு
உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். தமிழ்
சினிமா உலகத்தினரின் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனைத்து சினிமா உலகத்தினரும்
பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில்,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள்,
அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
நான்கு நாட்களும், நிகழ்ச்சிகள், காலை, 9:00
மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரையும், மாலை, 5:30 மணியில் இருந்து இரவு,
10:30 மணி வரையும் நடக்கின்றன. தமிழகம் முழுவதும், வரும், 24ம் தேதி, சினிமா
காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வரும், 18ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment