மகிழ்திருமேணி இயக்கத்தில் ஆர்யா!!!

1st of September 2013
சென்னை::'தடையற தாக்க' வெற்றிப் படத்தையடுத்து மகிழ்திருமேணி, அடுத்ததாக ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஏற்கனவே வெளியான இந்த செய்தியை முதலில் மறுத்த மகிழ்திருமேணி, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். (இப்போதுதான் தயாரிப்பாளர் கிடைத்திருப்பார் போல)

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, நான் அவன் இல்லை -2, பொக்கிஷம், மாப்பிள்ளை, போடா போடி உள்ளிட பல படங்களை தயாரித்த ஹேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்ஷன் - திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, லண்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

படத்தை 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Comments