2nd of September 2013
சென்னை::ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்குப் பிறகு எம்.ராஜேஷ், கார்த்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகும் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.
விஷால் நடித்த மதகஜராஜா, சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஆகிய இரண்டு படங்களும் செப்டம்பர் 6ஆம் தேதி தான் வெளியாகிறது. இந்த படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளில் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தின் டிரைலர் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இந்த டிரைலரை வருகிற 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

Comments
Post a Comment