முதன் முதலில் ரூ.500 சம்பாதித்த பிரியாமணி!!!

20th of September 2013
சென்னை::நடிகை பிரியாமணி முதன் முதலில் ரூ.500 சம்பாதித்திருக்கிறார்.
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் பிரயாமணி. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. என்னதான் பருத்தி வீரன் படத்தில் பெரியதாக பேசப்பட்டாலும் கோவிவுட்டில் இவரால் நிலைக்க முடியவில்லை. இருப்பினும் பிரியாமணி தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
 
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, “மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாட வேண்டும் என்றும் ஆசை உண்டு. எனக்கு வரும் கணவர் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தைரியமாக பேசக் கூடியவராகவும், சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் திறமையுடவராகவும் இருக்க வேண்டும்.
 
நான் முதன் முதலில் சம்பாதித்த 500 ரூபாயை இப்போதும் பொக்கிஷமாக நினைத்து பாதுகாத்து வருகிறேன், ” என்றார்.

Comments