திருமணமா? 5-6 ஆண்டுகளுக்கு மூச்! ஹன்சிகா திட்டவட்டம்!!!

28th of September 2013
சென்னை::சிம்பு-ஹன்சிகா காதல் விவகாரம் இப்போது வெளிப்படையான விஷயமாகியுள்ள நிலையில் திருமணம் எப்போது என்ற கவலைகள்தான் மீடியா உலகைப் போட்டு ஆட்டி கொண்டிருக்கிறது.
 
சிம்பு, ஹன்சிகா திருமணம் எப்போது என பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டது.
 
காதலை பல நாட்களாக மறைத்து வைத்து இருந்தனர். ஆனாலும் இருவரை பற்றியும் கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில்தான் காதலை பகிரங்க படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்கள்.

சிம்பு ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் இருந்து மீண்டவர். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள். தற்போது ஹன்சிகாவுடனான காதலை சிம்பு வெளிப்படுத்தி இருப்பதால் திருமணத்தை உடனே முடித்து விட ஆர்வம் காட்டுகின்றனர்.

சிம்புவும் திருமணத்துக்கு தயார் நிலையில் இருக்கிறார். ஆனால் ஹன்சிகா உடனடி திருமணத்துக்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார்.
 
கைவசம் 7 படங்கள் உள்ளன. இப்படங்களை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நிலைமை ஏற்படும். எனவே கைவசம் உள்ள படங்களை முடித்து விட தீவிரம் காட்டுகிறார்.
 
ஆங்கில தினசரி ஒன்றைப் போட்டு உலுக்க ஹன்சிகாவிடமே பேட்டி கண்டு கேட்டு விட்டனர்.
 
அதில் அவர் திருமணமா, ஐயையோ! அடுத்த 5 ஆண்டுகளுக்கு மூச் என்று கூறியுள்ளார்.
 
அதாவது தனக்கு 22 வயதுதான் ஆகிறது.. என்றும் திருமணம் என்பது இன்னும் தொலைதூரத்தில்தான் உள்ளது என்றும் கூறினாராம் ஹன்ஸ் அந்த பேட்டியில். சொந்த வாழ்க்கை பற்றி யோசிக்கக் கூட நேரமில்லை என்றாராம் ஹன்சிகா.
 
அவர் மேலும் அந்தப் பேட்டியில் கூறும்போது, "எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது. அடுத்க்ட 5 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
 
4 டெலுங்கு படம் உட்பட தற்போது 11 படங்கள் ஹன்சிகா கையில் உள்ளது..
tamil matrimony_INNER_468x60.gif

Comments