30th of September 2013
சென்னை::ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் சிங்கிள் டிராக் வரும் 4ம் தேதி வெளியிடப்படுகிறது.
நான் மகான் அல்ல படத்துக்குப் பிறகு கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இப்படத்தை ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ஹாட்ரிக் வெற்றியை தந்த எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். அவர், தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளி சரவெடியாக தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதனிடையே படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வரும் 4ம் தேதி வெளியிட உள்ளனர். ‘செல்லம்…’ என துவங்கும் இந்தப் பாடலை ராகுல் நம்பியார் பாடியிருக்கிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் ஆடியோவை வரும் 10ம் தேதி பிரமாண்ட விழா நடத்தி சென்னையில் வெளியிட இருக்கின்றனர்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி முதன் முதலாக நடிக்கும் இப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment