4 உலக மொழிகளில் ரிலீசாகிறது இரண்டாம் உலகம்!!!

6th of September 2013
சென்னை::முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரஷ்யன், ஜியோரிஜன், உஷ்பெக், துர்க்கிஷ் என்ற நான்கு உலக மொழிகளில் வெளியாகிறது. இதுதவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தியாவில் வருகிற தீபாவளியன்று ரிலீசாகிறது.

இரண்டாம் உலகம் படத்தை பிவிபி சினிமா 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ளனர். பெரும்பாலான ஷுட்டிங் சோவியத் ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இரண்டு காலகட்டம் வருகிறது. அதில் ஒரு காலகட்டம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த காலகட்டத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் வாழ்வது ரஷ்யாவில், இன்றைய காலகட்டத்தில் வாழ்வது சென்னையில். இந்த பூர்வஜென்மம் எப்படி இணைகிறது என்பது மாதிரியான கதை. அதனால்தான் நான்கு ரஷ்ய மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இரண்டாம் உலகம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான பேண்டஸி படம். எல்லா நாட்டுக்கும், மொழிக்கும் பொருந்தக்கூடிய கதை. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஆங்கில சப் டைட்டிலுடனும் படம் ரெடியாகி இருக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் கெயித் டெல்வின் (விசுவல் எபெக்ட்ஸ்), ஸ்டீபன் கோம்ஸ் (சவுண்ட் என்ஜினீயர்) பணியாற்றி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரை 50 லட்சம் பேர் யூ டியூப்பில் பார்த்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண 2 ஆயிரம் பிரிண்டுகள் தயாராகிறது.

Comments