’வருத்தப்படாத வாலிபர் சங்கம்: 4 நாட்களில் 13 கோடி!!!

12th of September 2013
சென்னை::’எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ பி.மதன் தயாரிப்பில், பொன்ராம் இயக்கிய படம் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, இயக்குனர் எம்.ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார்.
 
சென்ற வெள்ளிக் கிழமை (6-9-13) ரிலீசான இந்தப் படம் ரசிகர்க்ளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான நான்கு நாட்களில் 13 கோடி ரூபாய் வசுல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
 
இது சம்பந்தமாக நடிகர் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை ’வ.வா.ச’வுக்குக் கிடைத்திருக்கிறது.

Comments