16th of September 2013
சென்னை::இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளைச் சேர்ந்த 36 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தத் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு வி
ழா கொண்டாட்டம் சென்னையில் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தென்னிந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திங்கள்கிழமை செப்.16- ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சத்யம், உட்லண்ட்ஸ், 4 ஃப்ரேம்ஸ், அபிராமி ஆகிய 4 திரையரங்குகளில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன.
திங்கள்கிழமை (செப்.16) திரையிடப்படும் படங்கள்:
சத்யம்: "ஆயிரத்தில் ஒருவன்' (தமிழ்)
உட்லண்ட்ஸ்: "மகதீரா' (தெலுங்கு)
4 ஃப்ரேம்ஸ்: "பங்காரத மனுஷ்ய' (கன்னடம்)
அபிராமி: "பாசமலர்' (தமிழ்)
Comments
Post a Comment