விஸ்வரூபம் 2 ‘ விரைவில் திரையைத் தொடவேண்டும் என்று இறுதிக்கட்டப் பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்திவருகிறார் கமல்!!!

7th of September 2013
சென்னை::விஸ்வரூபம் 2 ‘ விரைவில் திரையைத் தொடவேண்டும் என்று இறுதிக்கட்டப் பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்திவருகிறார் கமல்.
 
இதற்கடுத்து லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் லிங்குசாமி தயாரிக்கும் கமல் படத்தை இதுவரையில் ரமேஷ்அரவிந்த் இயக்குவதாகத்தான் இருந்தது.
இப்போது திடீர்மாற்றம். ‘சார் நீங்களே டைரக்ஷனும் செய்துவிடுங்களேன் ‘என்று லிங்கு அன்புக்கட்டளை போட சிரித்துக் கொண்டே ஓ.கே சொல்லி விட்டாராம், கமல்.
 
மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்துக்கு இயக்கம் ப்ளஸ் நடிப்பு இரண்டும் கமல்தான். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான முன்னணி நடிகர்கள் பலர் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
கமல் படத்துக்கு ‘மூ’என்று ஒற்றை எழுத்தில் உற்சாகமாகப் பெயர்சூட்டி இருக்கிறார்கள்.
 
விஸ்வரூபம் 2′ படம் ரிலீஸான பிறகே ‘மூ’ படம் குறித்துப் பேச வேண்டும் என்று இருக்கிறாராம் கமல்.

Comments