தீபாவளிக்கு விஸ்வரூபம் 2? ஆக்‌ஷன் கொஞ்சம் ரொமான்ஸ் அதிகம்!!!

4th of September 2013
சென்னை::2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு தமிழ்த் திரையுலகினர் வெடித்த வெடிகளை விட விஸ்வரூபம் வெடித்த வெடிகள் தான் அதிகம்.
சில நாட்களில் பல வெடிகளை வீசி தமிழ்த் திரையுலகத்தையே திக்குமுக்காட வைத்த விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த தீபாவளிக்கே ரிலீஸாக தயாராகிவிட்டது. 

முதல் பாகத்தின்போதே, விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கான 75 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்ட கமல்ஹாசன் மீதிக்காட்சிகளை எவ்வித பொருமையும் காட்டாமல் விரைவாக முடித்தார். விஸ்வரூபம் திரைப்படமே பிரம்மாண்டமாக இருந்ததால், இரண்டாம் பாகத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் வானளவு ஓங்கி இருந்தன ரசிகர்கள் மத்தியில்.

அதற்கேற்றாற்போல் கமல்ஹாசனும் ஆண்ட்ரியாவுடன் ஆக்‌ஷன் காட்சிகள், பூஜா குமாருடன் நீருக்கடியில் சண்டைகாட்சிகள் என படமாக்க விஸ்வரூபம் 2 தனது புரமோஷனை தானே பார்த்துக்கொண்டது.
 
விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை விட ரொமான்ஸ் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் நன்றாக விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டநிலையில் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்கிறது கோடம்பாக்கம்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments