30th of September 2013
சென்னை::விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக நடிக்க முன்னாள் கனவு கன்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2. முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நடிகர்-நடிகையரே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகையான வஹிதா ரஹ்மானும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இவர், கமலுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம்.
வஹிதா ரஹ்மான் கடந்த 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ரேஷ்மா அவுர் சேரா’ என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர். இவர் கடைசியாக அபிஷேக் பச்சனுடன் ‘டெல்லி 6′ என்ற படத்தில் நடித்திருந்தார். 1950-60களில் இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர்
தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ஜெமினி நடித்த காலம் மாறிப்போச்சு ஆகிய படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடியுள்ளாராம். சுமார் 55 வருடங்களுக்குப் பிறகு வஹிதா ரஹ்மான் தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இந்த படம் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. வ
ரும், நவம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Comments
Post a Comment