செப்டம்பர் 27ஆம் தேதி 'ராஜா ராணி' ரிலீஸ்!!!

13th of September 2013
சென்னை::பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் ஏ .ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரிப்பில், ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜா ராணி' படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பாக்ஸ் ஸ்டார் மற்றும் ஏ .ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படம் ராஜா ராணி. இப்படத்தில் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் என்ற நிறுவனமும் இணைந்துள்ளது.

புதுமுக இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே  மக்களிடையே பெரும் வரவேற்பை   பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்திருப்பதால், இப்படம் குடும்பத்தோடு பார்க்ககூடிய படம் என்ற ரீதியிலும்   மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments