19th of September 2013
சென்னை::பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான, ரஞ்சனி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பின், திடீரென காணாமல் போனார். 20 ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் கேமரா வெளிச்சத்துக்கு வந்துள்ளார். கூத்தரா என்ற மலையாள படத்தில், மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், அவர்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், திரைப்பட ரசிகர்கள் மனதில், எனக்கென தனி இடமிருக்கிறது. இந்த 20 ஆண்டு இடைவெளியில், என்னை சந்தித்த பலரும், நடிக்க வரலாமே என, கேட்டனர். இதனால், மீண்டும் நடித்து பார்க்கலாமே என்ற ஆர்வம் வந்து விட்டது. அதனால் தான், களத்தில் குதித்து விட்டேன். நீண்ட இடைவெளிக்கு பின், கேமரா முன் நின்றபோது, படபடப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் சரியாகி விட்டது என, கூறியுள்ளார்.

Comments
Post a Comment