விரைவில் மன்மதன் 2 : மீண்டும் இயக்குனர் அவதாரமெடுக்கும் சிம்பு!!!

4th of September 2013
சென்னை::நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இயக்குனர் அவதாரமெடுக்க சிம்பு தயாராகி வருகிறாராம்.
மன்மதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்ற சிம்பு, அப்படத்தின் பாகம் 2 இனை தயாரித்து, இயக்கி, நடிக்கும் யோசனையில் உள்ளராம்.

சிம்புவின் கதை, திரைக்கதை, நடிப்பு மற்றும் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு மன்மதன் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி ஆகியோர் நடித்தனர்.

தற்போது 'மன்மதன் 2' படத்தினை இயக்கி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் ஹிட்டானதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனையில் கௌதம் மேனனுக்கு இருக்கிறதாம். இதிலும் தானே நாயகனாக நடிக்க சிம்பு தயாராகவுள்ளாராம்.

இந்நிலையில் மன்மதன் 2 படத்தை விட வி.டி.வி பார்ட் 2 வில் நடிக்க சிம்பு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம்.

சிம்பு இப்போது 'வாலு', ' வேட்டை மன்னன்' படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படங்கள் முடிவடைந்த பின்பு 'மன்மதன் 2'வை சிம்பு இ
யக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments