17th of September 2013
சென்னை::ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளில் சுமார் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரஜினி இந்தபடத்தில் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறார், அதுவும் இளமையாக காட்சியளிக்கிறார்.
இதற்கிடையே இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ.3 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் நடித்தது என்னவோ வெறும் இரண்டு நாட்கள் தானாம். இருந்தும் அவர் இவ்வளவு சம்பளம் பெற்று இருக்கிறார்.
மாதகணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் நடிகைகள் பலரே கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் பெறுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளே ரூ.1 முதல் ரூ.1.5 கோடி தான் சம்பளம் பெறுகின்றனர். அப்படி இருக்கையில் இரண்டு நாளுக்கு, தீபிகாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து இருப்பது நம்மூர் நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது..

ரஜினி இரண்டு வேடங்களில் நடித்துள்ள,‘கோச்சடையான்’அனிமேஷன் படம், ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதாம். இதில், ‘மன்னன்’ படத்திற்கு பின், மீண்டும் தன் சொந்தக்குரலில் வசன நடையில் அமைந்த, ஒரு பாடலை பாடியுள்ளார் ரஜினி.அக்டோபர் மாதம் இசை வெளியீடு நடைபெற உள்ளதாம். முன்னதாக ரஜினிக்கு, ஜப்பானிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், டோக்கியோவிலும் இசை விழா நடத்தும் திட்டம் வைத்துள்ளார்களாம். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, தகவல் வெளியிடப்படவில்லை, என்றாலும், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர், 12ம் தேதி, ‘கோச்சடையான்’ திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment