9th of September 2013
சென்னை::தமிழில் அஜீத் நடித்த பில்லா-2 படத்தில் நாயகியாக நடித்தவர் கேரள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய ஹீரோவின் படமாக அமைந்ததால் அந்த படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார் பார்வதி. ஆனால், படம் வந்த பிறகு பார்த்தால், அவர் நடிப்பு ஒரு காட்சியில் கூட பேசும்படியாக இல்லை. அதனால் அதையடுத்து எந்தவொரு இயக்குனரும் அவரை புதிய படங்களுககு ஒப்பந்தம் செய்யவில்லை.
அதனால் சில மாதங்களாக கேரளாவுக்கும், சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்த பார்வதி ஓமனக்குட்டன் பின்னர் கேரளாவிலேயே தங்கி விட்டார். இந்த நிலையில்தான், நதிகள் நனைவதில்லை என்றொரு படத்துக்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வரப்பட்டார் பார்வதி. அந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கும் முன்பே பப்ளிசிட்டி செய்து கொண்டார் பார்வதி.
ஆனால், பின்னர் படத்தின் கதை சொல்லப்பட்டு சம்பள பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரே செக்காக 20 லட்சம் தர வேண்டும் என்று தடாலடியாக சொல்லியிருக்கிறார் நடிகை. மார்க்கெட்டே இல்லாத நடிகை இப்படி கேட்டதால், ஆடிப்போன படாதிபதி, இவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று பார்வதி ஓமனக்குட்டனை சத்தமில்லாமல் கழட்டி விட்டு விட்டாராம்.
அதையடுத்து, இப்போது விரலுக்கேத்த வீக்கமாய் மோனிகாவை புக் பண்ணி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

Comments
Post a Comment