11th of September 2013
சென்னை::பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்) ஆகிய இருவருக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது . இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர்-14 அன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘555’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
Comments
Post a Comment