தன்னிடம் வேலை பார்க்கும் 10 பேருக்கு சொந்த வீடு : அஜித்தை பாலோ செய்வார்களா மற்ற ஹீரோக்கள்?!!!

19th of September 2013
சென்னை::பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் வெளி உலகுக்கு அரிசி மூட்டைகள், தையல் இயந்திரம், மிதி வண்டிகள், ரெயின் கோட் கொடுப்பது மாதிரியான சில்லறை உதவிகளை செய்து நல்ல பேர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த அளவு உதவிகளில் பாதியைக் கூட அவர்கள் தங்களிடம் பல வருஷம் அடிமை ரேஞ்சில் வேலை பார்ப்பவர்களுக்கு செய்வதில்லை.
நடிகர் அஜித் இதிலும் மற்ற ஹீரோக்களுக்கு முன்னுதாரணமான இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தற்போது அவர் தனது வீட்டில் பல வருடங்களாக வேலை பார்க்கும் 10 பேருக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் சுமார் 10 ஊழியர்களுக்கு  உதவ முடிவு செய்த அஜித் உடனடியாக ஓ.எம்.ஆர் ரோட்டில் உள்ள கேளம்பாக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கினார்.

Comments