5th of September 2013
சென்னை::யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 100வது படம் என விளம்பரப்படுத்தப்பட்ட ‘பிரியாணி’ பட வெளியீடு 2014ம் ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போனதால், அதற்கு முன்னதாக யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித் நடிக்கும் ‘ஆரம்பம்’ படம் யுவனின் 100வது படமாக வெளிவர இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பிரியாணி’ படம் ஏறக்குறைய வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் , தயாரிப்பு நிறுவனத்தால் அப்படத்தின் வெளியீடு தள்ளி போடப்பட்டிருப்பது அப்படக் குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகத் தெரிகிறது.
‘பிரியாணி’ படம் பூஜை போட்ட நாளிலிருந்தே யுவனின் 100வது படம் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் இப்படத்திற்கு முன்னதாக ‘ஆரம்பம்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
‘ஆரம்பம்’ படம் வெளியீடு பற்றி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘வானவராயன் வல்லவராயன்’ இந்த ஆண்டிற்குள் வெளிவந்தால் ‘பிரியாணி’ படம் யுவனின் 102வது படமாகவே வெளி வரும் நிலை உள்ளது.
இது பற்றிய அறிவிப்பு ஏதாவது வருமா என்பது விரைவில் தெரிந்து விடும்…
Comments
Post a Comment