9th of September 2013
சென்னை::தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம், ‘மத கஜ ராஜா’வை வெளியிட்டிருக்கிறார் விஷால். ‘‘எனது கேரியரில் இதுதான் பெரிய ரிலீஸ். சுசீந்தரனோட ‘பாண்டிய நாடு’ படத்தை என்னோட விஷால் பிலிம்பேக்டரி மூலமாக தயாரிக்கிறேன். இதுதான் முதல் படமா இருக்கணும்னு நினைச்சேன். இப்ப, ‘மத கஜ ராஜா’ முந்திக்கிச்சு. இது ஜாலியான படம். எண்பதுகள்ல வந்த ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’ மாதிரி காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், ஹீரோயிசம், கிளாமர்னு எல்லாம் கலந்த கலவையான படம். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். அந்த நம்பிக்கையிலதான் இதை நான் வெளியிடறேன்...’’ என்கிறார் விஷால்.
எப்பவோ வந்திருக்க வேண்டிய படம்..?
எல்லா படத்துக்குமே தடைகள் இருக்கும். இதுக்கு அதிகமா இருந்தது. எந்த நல்ல விஷயமும் அதுக்கான நேரத்துலதான் நடக்கும்னு சொல்வாங்க. ‘மத கஜ ராஜா’வுக்கு இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன்.
பத்து வருஷ முதலீட்டை இதுல இறக்கியிருக்கிறதா சொல்லி இருக்கீங்களே?
என்னோட முதல் படம் ‘செல்லமே’. 2003 செப்டம்பர்லதான் ஆரம்பமாச்சு. இந்த செப்டம்பர் எனக்கு பத்து வருடங்கள்தானே. இந்த பத்து வருடங்கள்ல என் கேரியர்ல நான் சம்பாதிச்ச அனுபவம் உள்ளிட்ட எல்லாத்தையும் இதுல முதலீடு பண்ணியிருக்கேன். நிச்சயம் இந்தப் படம் வரவேற்பைப் பெறும்.
என்ன மாதிரியான கதை?
ஊட்டியில வசிக்கிறவன் நான். ஒரு கல்யாணத்துக்காகக் காரைக்குடி போறேன். அங்க நண்பர்களைச் சந்திக்கிறேன். அவங்க எல்லாருக்குமே ஒவ்வொரு பிரச்னை. அதுக்கெல்லாம் ஒரே ஒருத்தர்தான் காரணம். அந்த ஒருத்தரைத் தேடி சென்னை வர்றோம். அடுத்து என்ன பண்றாங்க அப்படிங்கறதுதான் கதை. ரெண்டு மணி நேரம் ஜாலியா, எல்லா கவலையையும் மறந்துட்டு சிரிச்சுட்டு வர்ற படம். ஹீரோயிஷத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
சுந்தர்.சியோட வேலை பார்த்தது பற்றி?
அவர் கூட வேலை பார்க்கிறதுல எல்லாமே ரொம்பத் தெளிவா கோடு போட்ட மாதிரி இருக்கும். ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே இந்தப் படம் நல்லா வரும்னு எல்லோருக்குமே தெரிஞ்சது. ஜாலியா இருக்கிற இந்தப் படத்தோட திரைக்கதை ஷூட்டிங் ஸ்பாட்ல சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கும். அவரோட வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும் மகிழ்ச்சிதான்.
3 ஹீரோயினாமே?
அஞ்சலி, வரலட்சுமி. இவங்க தவிர சதாவும் இருக்காங்க. சதாவோட கேரக்டர் சஸ்பென்ஸ். பொதுவா சுந்தர்.சி படங்கள்ல ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதுலயும் அப்படித்தான்.
இதுல ஒரு பாடல் பாடியிருக்கீங்களே?
பொதுவா படங்கள்ல கிளைமாக்ஸுக்கு முன்னாடி ஃபாஸ்ட் பீட் பாடல் இருக்கும். அப்படி இல்லாம வித்தி யாசமா முயற்சி பண்ணலாமேன்னு நினைச்சோம். விஜய் ஆண்டனி சூப்பரா ட்யூன் போட்டிருந்தார். அப்ப யாரை பாட வைக்கலாம்னு யோசிச்சோம். ஒரு கொடூரமான குரலா இருக்கணும்னு நினைச்சோம். அப்பதான் விஜய் ஆண்டனி, ‘நீங்களே பாடுங்களேன்’னு சொன்னார். ‘இதுதான் உங்க கொலைகார முடிவா’னு கேட்டுட்டு, பாடிட்டேன். மற்றபடி எல்லா பாடல்களும் சிறப்பா வந்திருக்கு.

Comments
Post a Comment