நான் அரசுக்கு எதிரானவன் இல்லை – தனுஷ்!!!

12th of August 2013
சென்னை::தலைவா’ பட பிரச்சனை சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
ஆனால், அது  தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாக நாளிதழ்களில் வெளியாகியுள்ளது என தனுஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தனுஷ், தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ‘நய்யாண்டி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை  ,
“எனது ட்விட்டரில் ‘தலைவா’ படம் பற்றி கூறிய கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி மட்டும் பிரசுரிக்கப்பட்டதனால் அது வேறு அர்த்தத்தைத் தருகிறது.
 
தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரானவன் இல்லை”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments