வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷீலா!!!

16th of August 2013
சென்னை::பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷீலா. இளவட்டம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு வீராசாமி, சீனாதானா, கண்ணா, வேதா என சில படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். பர்கு படத்தில் அல்லு அர்ஜுனாவுடன் ஜோடியாக நடித்தார். அதுர்ஸ் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்தார்.
 
இந்தப் படத்தில் நயன்தாராவுடன் போட்டிபோட்டு கவர்ச்சியில் நடித்தார். தெலுங்கில் அத்தனை முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஷீலாவுக்கு திடீரென வாய்ப்புகள் நின்று போனது. இதுவரைக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை.
 
இப்போது எந்த பட வாய்ப்பும் இன்றி இருக்கிறார். இந்த நேரத்தில் பாதியில் விட்டிருந்த பட்டப்படிப்பை படித்து முடித்து விட்டார். இப்போது நிறைய ஒர்க்அவுட் பண்ணி தன் அழகை இன்னும் மெருகேற்றி இருக்கிறார். புதிதாக போட்டோஷூட் நடத்தி அதனை தெலுங்கு, தமிழ் பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி உள்ளார். விரைவில் நல்ல வாய்ப்பு வரும் என்று காத்திருக்கிறார் ஷீலா
 

Comments