29th of August 2013
சென்னை::ஆண்ட்ரியா, அனிருத் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனிருத் ‘3’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் ’கொலை வெறி’ பாடல் ஹிட்டானதால் அனிருத் பிரபலமானார் நிறைய படங்கள் குவிந்தது.எதிர்நீச்சல்’ படத்துக்கு இசையமைத்தார்.
தற்போது ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு இசையமைத்து வருகிறார். அனிருத்தும், ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் கிளம்பின. அனிருத்தை விட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். வயது வித்தியாசத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் கட்டிப் பிடித்து முத்தமிடுவது போன்ற படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இது ஆண்ட்ரியாவை சங்கடப்படுத்தியது. படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டது கேவலமான செயல் என்றார். பல மாதங்களுக்கு முன் விருந்தில் இப்படம் எடுக்கப்பட்டது என்றார்.
அனிருத்தும், நானும் பிரிந்து விட்டோம் என்றும் அறிவித்தார். அனிருத், முத்த படங்கள் வெளியானதற்காக ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. பிறகு நீண்ட நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது இருவரும் சண்டை சமரசமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தான் இசையமைக்கும் படங்களில் ஆண்ட்ரியாவை பாட வைக்க அனிருத் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது.
Comments
Post a Comment