கானா பாலா பாடிய ‘நோக்கியா பொண்ணு…சாம்சங் பையன்!!!

14th of August 2013
சென்னை::விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே, வசீகரா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய செல்வபாரதி தற்போது இயக்கி வரும் படம் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’.
 
இப்படத்தை சென் மூவீஸ் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில், கானா பாலா பாடிய ‘நோக்கிய பொண்ணு…சாம்சங் பையன்…, டொகோமோ சிம்மு நீ ரொமான்ஸு பண்ணு…’ என்ற பாடலின் டீஸர், யு டியூப்பில் வெளியான இரண்டே நாட்களில் 2,30,000 பேர் பார்த்துள்ளனர்.
 
இப்பாடலைக் கேட்ட ‘கானா புகழ்’ இசையமைப்பாளர்  தேவா, இப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவையும், கானா பாலாவையும் வெகுவாக பாராட்டினார்.
 
காதலை ரசிப்பவர்களை உற்சாகப்படுத்தும் இப்படத்தின் இசை வெளியீடு இம்மாத கடைசியில் நடைபெற இருக்கிறது.

Comments