19th of August 2013
சென்னை::தமிழ் சினிமாவில் அதிகமாக முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் அஜித்தின் ஏகன், விஜய்யின் வில்லு படங்களின் தோல்வியால் தனது படத்தயாரிப்பை நிறுத்தியது. இப்போது மீண்டும் படம் தயாரிக்கும் நோக்கத்துடன் யு டர்ன் அடித்திருக்கிறார்கள்.
இ
வர்கள் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக விக்ரம் நடிப்பார், தரணி படத்தை இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. விக்ரமை வைத்து தில், தூள் என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர் தரணி. தெலுங்கில் இயக்கிய பங்காரம், தமிழில் இயக்கிய குருவி, ஒஸ்தி என தரணியின் கடைசி மூன்று படங்கள் தோல்வியை தழுவின. அதனால் நிதானமாக தனது புதிய ஸ்கிட்ல்ப்டை உருவாக்கி வருகிறார். அதில்தான் விக்ரம் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
ஐ படத்தில் நடித்து வரும் விக்ரம் அதற்கு முன் கரிகாலன் என்ற சரித்திரப் படத்தில் கமிட்டானார். அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு வேறொரு படம் நடித்துத்தர முன் வந்திருக்கிறார். அந்தப் படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக ஸ்டுடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
Comments
Post a Comment