26th of August 2013
சென்னை::தான் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் படத்தின் தலைப்பு அதிரடி கிடையாது என்று விஜய் மறுத்துள்ளார்.
துப்பாக்கி வெற்றிக் கூட்டணியான விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் கைகோர்க்கிறது. தற்போது விஜய் ஜில்லா படத்திலும் முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கான பிஸ்டல் படத்திலும் பிஸியாக இருக்கிறார்கள்.
இரண்டு படங்களும் முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். இதற்கிடையில் விஜய்-முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு 'அதிரடி' என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை விஜய்-ஏ ஆர் முருகதாஸ் இருவருமே மறுத்துள்ளனர்.
இது குறித்து விஜய் கூறியதாவது: "ஜில்லாவை முடித்துவிட்டு நான் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் படத்தின் தலைப்பு 'அதிரடி' இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை" என்றார்.
Comments
Post a Comment