அமலா பாலின் பொய்யும் மெய்யும்!!!

14th of August 2013
சென்னை::ஹைதராபாத்தில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அறியாத வயதில் இரண்டு பேர் மீது காதல் கொண்டதை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அமலா பால். சிந்துசமவெளியில் என்னை ஆபாசமாக போஸ்டரில் போட்டுட்டாங்க என்று குமுறியும் இருக்கிறார்.

அமலா பாலின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு நல்ல வரவேற்பு. துணிச்சலான நடிகை என்று சக நட்சத்திரங்களிடமிருந்து பாராட்டு கிடைத்திருக்கிறதாம்.
 
அதேநேரம் லவ் பெயிலியர் - தமிழில் காதலில் சொதப்புவது எப்படி - படத்தின் போது அதே ஆந்திராவில் அமலா பால் பேட்டி தந்தார். அப்போது பேசியவர், கேரளாவில் மாடலிங் செய்து கொண்டே விளம்பரங்களில் நடித்தேன். என்னுடைய புகைப்படத்தைப் பார்த்த மைனா இயக்குனர் என்னை தேடி வந்து கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் நடித்தேன். படமும் ஹிட்டானது என்றார்.

மைனாவுக்கு முன்னால் துக்கடா படங்களில் நடித்ததையோ, வாய்ப்பு இல்லாமல் சிந்துசமவெளியில் ஏடாகூடமான வேடத்தில் நடித்ததையோ அவர் குறிப்பிடவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனே தனது படப்பட்டியலில் சிந்துசமவெளியை சேர்ப்பதில்லை.
 
அந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் ஜெயமோகனின் பங்கு கணிசமானது. வசனத்தையும் அவர்தான் எழுதியிருந்தார். போஸ்டரில் பெயரும் வந்தது. அவரே சிந்துசமவெளியை ஒதுக்கும் போது, வளர்ந்து வரும் ஒரு நடிகை அந்தப் படத்தைப் பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமில்லை.
அமலா பாலுக்கு தற்போது வந்திருக்கும் துணிச்சல் ஜெயமோகனுக்கு எப்போதாவது வருமா?
 
கொசுறு தகவல். சாமி சமீபத்தில் ஆரம்பித்து பாதியில் நிற்கும் கங்காரு படத்தின் கதை உதவி இயக்குனர் ஒருவருடையது. அந்த கதை விவாதத்திலும் ஜெயமோகன் கலந்து கொண்டார்.

Comments