29th of August 2013
சென்னை::ஏ.ஆர்.ரகுமானால் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரீனிவாஸ். படையப்பா படத்தில் வரும் மின்சார கண்ணா... பாட்டு மூலம் பிரபலமானவர். இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள ஸ்ரீனிவாஸ்,
இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கூறும்போது: எங்கள் குடும்பம் இசைக்குடும்பம் நாகர்கோவில்தான் சொந்த ஊர். வளர்ந்தது திருவனந்தபுரத்தில் முறைப்படி இசை கற்றேன். இசை அமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றத்தான் வாய்ப்புக் கேட்டேன். ஆனால் பாடகராகி விட்டேன். ஏற்கெனவே இரண்டு மலையாளப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன்.

கங்காரு படம் பாசத்தை அடிப்படையாக கொண்ட மென்மையான படம் அதற்கேற்ப பாடல்களுக்கு மெட்டு போட்டிருக்கிறேன். என்றார்.
இப்போது இசை அமைப்பாளராகி உள்ளார். சாமி டைரக்ட் செய்து வரும் கங்காரு படத்துக்கு அவர்தான் இசை அமைக்கிறார். படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். அக்டோபர் 14ந் தேதி சென்னை டிரேட் செண்டரில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி ஸ்ரீனிவாசை முறைப்படி இசை அமைப்பாளராக அறிவிக்கிறார்கள்.
Comments
Post a Comment