27th of August 2013
சென்னை::ஜில்லா படம் வெற்றியடைய வேண்டும் என்று நடிகர் ஜீவா பழனி முருகன் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.
சென்னை::ஜில்லா படம் வெற்றியடைய வேண்டும் என்று நடிகர் ஜீவா பழனி முருகன் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.
ஜீவா தற்போது யான், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் நீ நல்லா வருவடா படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த பரபரப்புக்கு மத்தியிலும் அவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அண்மையில் கொடைக்கானல் சென்றிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து பழனி மலை முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தந்தை தயாரித்து வரும் ஜில்லா படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்.
அதோடு சேர்த்து தன்னுடைய படங்களுக்கும் இந்த பிரார்த்தனையை செய்திருக்கிறார்.
ஜில்லா படத்தை விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனர் நேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌதிரி தயாரிக்கிறார்.
Comments
Post a Comment