13th of August 2013
சென்னை::அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானம் தங்கையாக நடித்தவர் அகன்ஷா புரி. இவர் பேரரசு இயக்கும் திகார் படத்தில் ஹீரோயினானார். இது பற்றி பேரரசு கூறியது: என்னுடைய படத்தில் குத்தாட்ட பாடலுக்கு ஏற்ப துள்ளல் ஆட்டம் ஆடும் ஹீரோயின்களையே தேர்வு செய்வேன். திகார் படத்திற்கும் அதுபோன்ற ஹீரோயின் தேவைப்பட்டார்.
ஹீரோ முகுந்தன் புதுமுகம் என்பதால் ஹீரோயினும் புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். இதையடுத்து இணையதளத்தில் ஹீரோயின் தேடினேன். அதில் கிடைத்தவர்தான் அகன்ஷா புரி. அவரை அழைத்து பேசியபிறகுதான் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் என்று தெரிந்தது. ஹீரோயினுக்குரிய தகுதி அனைத்தும் இருந்ததால் அவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன்.
எதிர்பார்த்ததுபோல் செம ஆட்டம் போட்டிருக்கிறார். முகுந்தன், அகன்ஷா புரி நடித்த 3 பாடல் காட்சிகள் துபாயில் படமானது. காட்சன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஷபீர் இசை. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு. தமிழ், மலையாளம் இருமொழியில் படம் உருவாகிறது.
Comments
Post a Comment