23rd of August 2013
சென்னை:: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஐ. இந்தப் படத்தின் ஸ்டோரி மற்றும் விக்ரமின் கெட்அப் போன்றவை செம சீக்ரெட்டாக வைக்கப்பட்டிருந்தது. கதை, ஒரு விளையாட்டு வீரன் வாழ்க்கையில் எப்படி போராடி ஜெயிக்கிறான் என்பது. விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்களை பற்றியது திரைக்கதை என நியூஸ் கசிந்திருக்கிறது. விக்ரம் தனது எடையில் பாதியை குறைத்து ஒல்லிப் பிச்சானாக நடிக்கிறார் என்பதும் வெளிவந்த சீக்ரெட்களில் ஒன்று. தன்னோட ஒல்லி தோற்றம் வெளியில தெரிஞ்சிடக்கூடாதுன்னு விக்ரம் வெளிநாட்டுல தலைமறைவா இருந்ததும் தனிக்கதை. தற்போது விக்ரமின் ஒல்லிபிச்சான் படங்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து. அரிசி உணவை தவிர்த்து, வெறும் பச்சைக்காய்கறிகள், பழங்கள், எண்ணெய் இல்லாத மிளகு சிக்கன் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்டு, 84 கிலோ இருந்த தன் எடையில் 14 கிலோவை குறைத்திருக்கிறாராம். இன்னும் 10 கிலோ குறைக்க வேண்டுமாம் (அம்மாடியோவ்). படத்தில் பாதி பழைய விக்ரமும், மீதி பாதியில் ஒல்லிபிச்சான் விக்ரமும் நடிக்கிறார்களாம். தன் எடைக் குறைப்பில் ஏற்படும் தோற்ற மாற்றங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்கிறாராம். அப்படி எடுக்கப்பட்ட படம் ஒன்றுதான் வெளியாகி உள்ளது. அது தான் நீங்கள் அருகில் பார்ப்பது.

Comments
Post a Comment