காதல் வந்தால் போலீஸுக்கு போகணும் - ஹன்சிகா விஷயத்தில் கரெக்ட்!!!

14th of August 2013
சென்னை::லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட இல்ல. இனி அடிக்கடி பொய் சொல்ல வேண்டியிருக்கும், சண்டை போடணும், போலீஸ் ஸ்டேசனுக்கும் போக வேண்டியிருக்கும்... எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி சொன்னது ஹன்சிகா விஷயத்தில் கரெக்டாக நடக்கும் போலிருக்கிறது.
 
சிம்புவை ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்து வாரக்கணக்கில்தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் இரவு பார்ட்டி ஒன்றில் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியானது. சிம்பு, நயன்தாரா அந்தரங்க போட்டோவுடன் ஒப்பிடுகையில் இது சும்மா... சைவ போட்டோ. ஆனாலும் ஹன்சிகாவால் தாங்க முடியவில்லை போலிருக்கிறது.
 
பர்சனலாக எடுத்த போட்டோவை எப்படி பப்ளிக்ல கொண்டு வரலாம்? நான் போலீஸுக்குப் போகப் போறேன் என்று கொதித்து கொண்டிருக்கிறார். இதுவரை ஹன்சிகாவை கான்ட்ரவர்ஸி நெருங்கியதில்லை. காதலிக்கிறார் இல்லையா... இனி கான்ட்ரவர்ஸியைத்தான் போர்த்திகிட்டு துங்க வேண்டியிருக்கும்.

Comments