தேசிங்கு ராஜா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து வரும் பிந்துமாதவி அவர் டயலாக் பேசுவதுப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம்!
12th of August 2013
சென்னை::சாதாரணமாக விமல் பேசினாலே குடிபோதையில் பேசுவது போல்தான் இருக்கும். அதனால்தான் அவர் மேடைகளில் பேசுவதைப்பார்த்து குடித்து விட்டு வந்திருப்பதாக ஒரு சமயத்தில் செய்தி பரவியது. அதையடுத்து, நான் சாதாரணமாக பேசினாலே அப்படித்தான் இருக்கும். வேண்டுமானால் என்னிடம் நேரில் வந்து பேசி தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார் விமல்.
அதன்பிறகுதான் அவரைப்பற்றி அந்த மாதிரி செய்தி வெளியாவது குறைந்தது.
இந்த நிலையில், தற்போது தேசிங்கு ராஜா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து வரும் பிந்துமாதவியும் அவர் டயலாக் பேசுவதுப்பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம். சில காட்சிகளில் அவர் நார்மலாக பேசும் வார்த்தைகளே சரியாக புரியாமல் தடுமாறினாராம். அதையடுத்து, தமிழ் உங்கள் தாய்மொழி அதிலேயே இவ்ளோ தடுமாற்றமா என்று கிண்டல் செய்தாராம்.
அதன்பிறகுதான், ஒரு தெலுங்கு நடிகையே நம்மைப்பார்த்து இப்படி கேட்டுவிட்டாரே என்று தமிழை அழுத்தம் திருத்தமாக பேசி நடித்தாராம் விமல். என்றாலும், படப்பிடிப்பு முடிகிறவரை இதை சொல்லிச்சொல்லியே அவ்வப்போது ஸ்பாட்டில் விமலை கலாய்த்துக்கொண்டேயிருந்தாராம் பிந்துமாதவி.
Comments
Post a Comment