நைட் பார்ட்டியில் சிம்பு ஹன்சிகா நெருக்கம்: நெட்டில் உலா வரும் படங்களால் பரபரப்பு!!!

13th of August 2013
சென்னை::நடிகர் சிம்புவுடன் ஹன்சிகா கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பதுபோன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவும், ஹன்சிகா மோத்வானியும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது பற்றி கிசுகிசு வெளியானபோது இருவரும் மறுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். இந்த அறிவிப்பை ஹன்சிகா வெளியிட்ட சில நொடிகளில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அதை எடுத்து வெளியிட்டதுடன் தானும் ஹன்சிகாவை காதலிப்பதாக அறிவித்தார். திருமணம் பற்றி சிம்பு கூறும்போது, எனது தங்கை இலக்கியாவுக்கு திருமணம் முடிந்தபிறகே எங்களது திருமணம் நடக்கும் என்றார். ஆனால் ஹன்சிகாவோ, தங்களது திருமணம் நடக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். அதுவரை படங்களில் நடிப்பேன் என்று கூறினார்.

சமீபத்தில் ஹன்சிகாவுக்கு 22வது வயது பிறந்தது. இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்றை ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் பரிசளித்தார் சிம்பு. அந்த கேக் வெட்டி ஹன்சிகா பிறந்த நாள் கொண்டாடினார். இந்நிலையில் சிம்புவை ஹன்சிகா நைட் பார்ட்டி ஒன்றில் முகத்தோடு முகம் பதித்து கட்டிப்பிடித்திருப்பது போன்ற போட்டோக்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஹன்சிகா தரப்பில் விசாரித்தபோது, இணைய தளத்தில் சிம்புவுடன் ஹன்சிகா நிற்பதுபோன்று வெளியாகி இருக்கும் ஸ்டில்கள் போலியானவை. ஹன்சிகாவின் இமேஜை கெடுப்பதற்காக இதுபோன்ற வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்.

Comments