பாண்டிய நாடு படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!!!

29th of August 2013
சென்னை::நடிகர் விஷாலுக்கு இன்று 35வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை 'பாண்டிய நாடு' படப்பிடிப்பில் கொண்டாடினார்.

விஷாலில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'பாண்டிய நாடு'. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

இன்று (ஆகஸ்ட் 29) தனது 35வது பிறந்தநாளை 'பாண்டிய நாடு' படப்பிடிப்பில் விஷால் கொண்டாடினார். அவருக்கு இயக்குநர் சுசீந்திரன், மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விக்ராந்த், நடிகை வரலட்சுமி, சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு, ஒளிப்பதிவாளர் மதி, நிர்வாக தயாரிப்பாளர் பிரவீன் ஆகியோர் கலந்துகொண்டு விஷாலை வாழ்த்தினார்கள். 
 
அஞ்சலியைத் தேடும் விஷால்!
 
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி வெளிவர இருக்கும் படம் ‘மத கஜ ராஜா’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்ற போது படத்தின் இயக்குனர் சுந்தர் .சி, விஷால், வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
படத்தின் மற்றொரு ஹீரோயினான அஞ்சலி கலந்து கொள்ளவில்லை. ஆனால் , திடீரென அஞ்சலி வந்து விட்டார் என புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.
 
அவர்கள் சென்றதற்கான காரணம் தெரிந்ததும், சுந்தர் .சியும் விஷாலும் சிரித்துக் கொண்டனர். ஏனென்றால், அவர்கள் தேடியே அஞ்சலி கிடைக்கவில்லை என முணுமுணுத்துக் கொண்டார்களாம்.
 
இதனிடையே ஒரு பத்திரிகை பேட்டியிலும் விஷால், “தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட இருப்பதால், அஞ்சலியையே சொந்தக் குரலில் பேச வைக்க எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை,” என்று கூறியிருக்கிறார்.
 
இந்த வார முக்கிய பத்திரிகைகளில் அஞ்சலி விவகாரமே வந்திருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு மீண்டும் அஞ்சலி பற்றிய செய்திகள் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது.
 
செப்.6 ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்!
 
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடிக்க விஜய் ஆண்டனி இசையில் சுந்தர் .சி இயக்கியுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாகிறது.
 
இப்படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
 
சுந்தர் .சி இயக்கத்தில் வெளிவரும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் சூழ்நிலையில், இந்த படத்தை விஷால், அவருடைய சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார்.
‘பட்டத்து யானை’ படத்திற்குப் பிறகு விஷால் நடித்து வெளி வரும் படம் ‘மத கஜ ராஜா’….
 
இப்படத்தின் வெற்றி மூலம் விஷாலுக்கு ‘யானை பலம்’ கிடைத்தால் சரி…..

Comments