22nd of August 2013
சென்னை::ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ராஜா ராணி. இந்தப் படத்தை ஷங்கரின் உதவியாளர் அட்லீ இயக்கி இருக்கிறார்.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்யா நடித்த படங்களிலேயே அதிகபட்சமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் இது.
ஆர்யாவுக்கும் நயன்தாரா
வுக்கும் திருமணம் என்று இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்பதுபோன்ற புகைப் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
மேலும் படத்தின் டிரைலர், சிங்கிள் டிராக், மற்றும் பாடல் எடுக்கப்பட்ட காட்சி என வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.
இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை அதாவது(23-ம் தேதி) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிழை பழைய எல்.பி. ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர். இந்த அழைப்பிதழை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கொடுத்து விழாவுக்கு வருமாறு இயக்குனர் அட்லீ அழைப்பு விடுத்தார். சூப்பர் ஸ்டாரும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment