27th of August 2013
சென்னை::நடிகர் விஷால் மதகஜராஜா படத்துக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
விஷால் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மதகஜராஜா. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தை ‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரித்திருக்கிறது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பா.விஜய், அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மேலும் படத்தில் விஷால் - சந்தானம் கூட்டணியின் காமெடி பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு நில்லாமல் விஷால் இந்தப் படத்தில் முதன் முறையாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். “மை டியர் லவ்வரு, டியர் லவ்வரு, நீ சூப்பர் டக்கரு…” என்று தொடங்கும் அந்த பாடலை சுமார் ஒரு மணிநேரத்திலேயே அசத்தலாக பாடிக்கொடுத்திருக்கிறார்.
படத்தை விஷால், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். மதகஜராஜா படம் செப்டம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
Comments
Post a Comment