இன்டர்நெட்டில் ‘ஆபாச படம்’: நடிகை ஹன்சிகா அதிர்ச்சி!!!

14th of August 2013
சென்னை::நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.

நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.

இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.
 
அதிர்ஷ்ட தேவதையான ஹன்சிகா!!!
 
ஹன்சிகா மொத்வானி இந்த வருடம் நடித்து வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரை உலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும்போது அதை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான்.

ஒரு நடிகையாக மழை, வெயில் என பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் தேர்ந்து எடுப்பதும், என் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன்.

இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும், ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது. இதை எல்லாவற்றையும்விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டதை அளித்து இருக்கலாம் என புன்னகையோடு கூறினார்.

Comments