20th of August 2013
சென்னை::மெட்ராஸ் கபே' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்தப் படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற புலிகளின் விடுதலை போரை மையமாக வைத்து நடிகர் ஜான் ஆபிரகாம் "மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை ஷீகித் சர்கார் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் இம் மாதம் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 70 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இந்நிலையில்,புலிகளின் போரை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக (புலிகள் ஆதரவு) தமிழ் இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில (புலிகள் ஆதரவு) அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் அறிவித்து வருகின்றன.
இதனால் அந்தப் படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை வெளியிடும் நிறுவனத்தின் நிர்வாகி விஜய ஆறுமுகம், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை திங்கள்கிழமை சந்தித்து, சென்னையில் "மெட்ராஸ் கபே' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.
Comments
Post a Comment