15th of August 2013
சென்னை::ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயம்தான். இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
சென்னை::ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயம்தான். இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இசையமைக்கவே நேரம் இன்றி பறந்து கொண்டிருக்கும் இசைப்புயலின் அடிமனதில் அப்படியொரு ஆசை இருக்கும் என்று யார் எதிர்பார்த்தது? நல்ல கலாபூர்வமான படங்களை தயாரிக்க வேண்டும். முடிந்தால் அதற்கான கதைகளை நாமே எழுத வேண்டும்.
சினிமாவுக்கு இசை, இசைப்பள்ளி என்று பிஸியாக இருந்தாலும் தனது தயாரிப்பு கனவுக்காக தனியே நேரம் ஒதுக்குகிறார். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஒய்எம் மூவிஸ். ஆரம்பகட்டம் என்பதால் ஈரோஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து முதல் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். முதல் படம் காதலையும், கலையையும் மையப்படுத்தியது என்கிறார்கள். படத்துக்கு ரஹ்மானே இசையமைப்பார் என தெரிகிறது.
படத்தில் நடிப்பவர்கள் மற்றும் இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Comments
Post a Comment