மத கஜ ராஜா’ படத்தை வாங்கிய விஷால்!!!

23rd of August 2013
சென்னை::சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ படத்தை விஷாலே வாங்கி ரிலீஸ் செய்கிறார்.
 
விஷாலின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் ‘மத கஜ ராஜா’ வரும் செப்டம்பர் மாதம் 9ம் விநாயகர் சதுர்த்தியன்று  வெளியாக உள்ளது.
 
படத்தைப் பார்த்து மிகவும் பிடித்துப் போனதால் விஷால் படத்தை சொந்தமாக வெளியிடும் முடிவுக்கு வந்தாராம்.
 
இந்த படம் முடிந்து சில மாதங்களாகியும் வெளிவரத் தாமதமானதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
 
எப்படியோ ‘எம் ஜி ஆர்’ (மத கஜ ராஜா) ஹிட்டானால் சரி…

Comments