29th of August 2013
சென்னை::நயன்தாரா, ஆர்யாவுக்கும் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 'ராஜா ராணி' படத்தின் ஆடியோ விழாவில் நயன்தாரா பங்கேற்கவில்லை.‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் நயன்தாரா. இப்படத்தையடுத்து இப்போது 'ஆரம்பம்', ‘ராஜா ராணி' படங்களில் இணைந்து நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் 'ராஜா ராணி' படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் ஆர்யா, நயன்தாராவுக்கு இடையே காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட் முழுவதும் கிசுகிசு பரவி இருக்கிறது. இ
துபற்றி ஆர்யா கூறும்போது ‘நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்தான்' என்று பதில் அளித்தார்.
இந்த கிசுகிசுவை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு புரமோஷனுக்காக பல்வேறு டெக்னிக்கை பட யூனிட்டார் கையாண்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் நயன்தாரா, ஆர்யாவுக்கு திருமணம் என்பதுபோல் அழைப்பிதழ் அடித்து ‘ராஜா ராணி' பட குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். சமீபத்தில் படத்தின் ஆடியோ விழா நடந்தது. இதில் படத்தில் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என திரையுலகை சேர்ந்த பல விஐபிக்கள் பங்கேற்றனர். ஆனால் ஹீரோயினாக நடித்த நயன்தாரா விழாவுக்கு வராமல் புறக்கணித்துவிட்டார். இது அங்கிருந்தவர்களை முணுமுணுக்க வைத்தது. அனுஷ்காவுடனும் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக மற்றொரு கிசுகிசு பரவுகிறது. இதனால் ஆர்யா மீது நயன்தாரா கோபமாக இருப்பதாகவும் அதனாலேயே விழாவை புறக்கணித்ததாக ஒரு தரப்பினர் பேசுகின்றனர்.
வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு நயன்தாரா செல்வது இல்லை அதனாலேயே அவர் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் கோபிசந்த்துடன் நடிக்கும் பட பூஜை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் நயன்தாராவும் நடிக்கிறார். பூஜையில் நயன்தாரா பங்கேற்றார். ‘ராஜா ராணிÕ கேசட் விழாவில் நீண்ட நேரம் பேசிய ஆர்யா ஒரு இடத்தில்கூட நயன்தாரா பெயரை சொல்லாமல் புறக்கணித்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றி இருப்பதாக பேசப்படுகிறது.
Comments
Post a Comment