கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

20th of August 2013
சென்னை::கைதி வேடத்தில் ரீமா::யுவன் யுவதி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மல்லுவுட் ஹீரோயின் ரீமா கல்லிங்கல். அடுத்து ‘கோ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டினார். முல்லைபெரியாறு அணையை மையமாக வைத்து உருவான ‘டேம் 999 பட பிரச்னையின்போது அப்படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். வாய்ஸ் கொடுத்த கையோடு கோலிவுட் படங்களுக்கு கால்ஷீட் தருவதையும் நிறுத்திவிட்டார். மல்லுவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் ரீமா தற்போது ‘எஸ்கேப் ஃபிரம் உகாண்டா என்ற படத்தில் செய்யாத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கும் கைதியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க ஆப்ரிக்காவில் நடந்துள்ளது. உகாண்டாவை சேர்ந்த நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.

பேட்மின்டன் ரசிகை-

பெரும்பாலான நடிகர், நடிகைகள் கிரிக்கெட் பிரியர்கள். காஜல், திவ்யா டென்னிஸ் ஃபேன்கள். பிரபல வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் விளையாட்டை ரசிப்பதற்காக சமீபத்தில் இருவருமே லண்டன் சென்று திரும்பினர். இவர்களில் சற்று வித்தியாசமானவர் டாப்ஸி. இவர் பேட்மின்டன் ரசிகை. சென்ற வாரம் ஐதராபாத்தில் வீராங்கனை சாய்னா தலைமையில் நடந்த பேட்மின்டன் போட்டியை நேரில் கண்டு ரசித்ததுடன் அவர்களுடன் புகைப்படும் எடுத்துக்கொண்டார்.

இதய தராசு-

‘மைனா ஹீரோ விதார்த் அஜீத்துடன் Ôவீரம் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விதார்த் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு மீசான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சஜின் வர்கீஸ் இயக்குகிறார். அரபு மொழியில் மீசான் என்றால் இதய தராசு என்று அர்த்தமாம்.

கார்த்தி பாட்டு லீக்-

வழக்கம்போல் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்துள்ள ‘பிரியாணி‘ படத்தின் ஆடியோவும் யுடியூபில் ரிலீஸ் ஆகிவிட்டதாம். இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள இயக்குனர், ‘பிரியாணி பாடல்கள் யுடியூபில் லீக் ஆனது ஷாக். ஆடியோவை ஒரிஜினலாக வாங்குங்கள். ஆனால் என்ன செய்வது மக்கள் திருட்டுத்தனத்தை விரும்புகிறார்களே என்று அங்கலாயத்துள்ளார்..
 
பியா ஆசை-

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறமைகள் இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் பலரிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டிருப்பதாக கூறும் பியாவுக்கு ரஜினி, கமல் இருவருடனும் நடிக்க ஆசையாம்.

கவுதம் இயக்கத்தில் விக்ரம்-

ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் நடிக்கும் விக்ரம் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் விக்ரமை சந்தித்த கவுதம் தனது புது ஸ்கிரிப்ட்டின் ஒன் லைன் சொன்னாராம். அது கவரவே உடனே கால்ஷீட் தருவதாக கூறி விட்டார் விக்ரம். தில், தூள் படங்களை இயக்கிய தரணி மீண்டும் விக்ரம் நடிக்கும் படமொன்றை இயக்க உள்ளாராம்.

அஜீத்தை காயப்படுத்திய ஆர்யா-

‘ஆரம்பம் பட ஷூட்டிங் துபாயில் நடந்தபோது ஸ்டன்ட் காட்சியில் வேகமாக சென்ற கார் சக்கரத்தில் கால் சிக்கி படுகாயம் அடைந்தார் அஜீத். தற்காலிக சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். விபத்து நடந்த காட்சியின்போது காரை ஓட்டியது ஆர்யாதானாம். அதிர்ஷ்டவசமாக அஜீத் தப்பி இருந்தாலும் படுகாயம் அடைந்த இடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.

காமெடி ஆவி-

கல்லூரி காலங்கள் பட இயக்குனர் ரெமோ சிவா அடுத்த படத்துக்கு ‘ஆவி பறக்குது எனப் பெயரிட்டுள்ளார். ஆவி பற்றிய கதையா என்றால், ‘காமெடி மற்றும் சஸ்பென்ஸ் படம் என்கிறார். பாலிவுட்டில் தஸ் கஹானியா படத்துக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் இப்படம் மூலம் கோலிவுட்டுக்கு என்டர் ஆகிறார். யு,கே.செந்தில்குமாரின் உதவியாளர் விஜய் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கொடைக்கானல், காரைக்குடியில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதில் நடிக்க ஹீரோயின் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது..
 
நோ சொல்லும் ஹீரோயின்-
‘காதல் நடிகை சரண்யா நாக்குக்கு பள்ளி மாணவி கேரக்டரில் நடித்து அலுத்துவிட்டதாம். ‘ரெட்டை வாலு படத்தில் பள்ளி மாணவியாக மீண்டும் நடிக்க கேட்ட போது யோசித்தார். யூனிபார்ம் போட்டு போட்டோ ஷூட் நடத்திய பின் திருப்தி அடைந்தவர் ஓ.கே சொன்னார். இதுதான் பள்ளி மாணவியாக நடிக்கும் கடைசி கேரக்டர். இனி பள்ளி மாணவியாக நடிக்க மாட்டாராம். ‘எத்தனை நாள்தான் பள்ளிகூட நாயகியாகவே நடிக்கிறது. புரமோஷன் கொடுத்து கல்லூரி மாணவி வேஷம் தாங்கப்பானு இயக்குனர்களிடம் கேக்கறாராம்.

கலாம் கருத்துடன் படம்-

தேசப்பற்று படங்களில் விரும்பி நடிக்கும் அர்ஜுன், அடுத்து ‘ஜெய் ஹிந்த் பார்ட் 2 இயக்கி நடிக்கிறார். அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். கல்வி பற்றி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கருத்தை மையமாக வைத்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளதாம்.

லண்டனில் பரதேசி-

பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த படம் ‘பரதேசி. விரைவில் லண்டனில் நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பரிசுகளுக்கான போட்டி படமாக தேர்வாகி இருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த வெளிநாட்டு பட இயக்குனர் உள்பட 8 விருதுகளுக்காக பிரிவில் போட்டியிடுகிறது.

விமல் படம் தணிக்கை-

எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி நடிக்கும் படம் ‘தேசிங்கு ராஜா. கடந்த மாதத்தில் புற்றீசல்போல் படங்கள் வந்ததால் இப்பட ரிலீசில் தாமதம் காட்டி வந்தனர். தணிக்கைக்கு அனுப்புவதிலும் வேகம் காட்டவில்லை. தற்போது கிடைத்திருக்கும் இடைவெளியில் படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் எழில் முடிவு செய்ததை அடுத்து தணிக்கைக்கு திரையிடப்பட்டது. ‘யு சான்றிதழ் கிடைத்ததால் இம்மாதம் 23ம் தேதி வெளியிட உள்ளனர்.

Comments