21st of August 2013
சென்னை::நடிகை சூர்யா முதன் முறையாக பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
இன்றைய தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் நடிகர்கள் பலர் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும், கார்த்தி பிரியாணி படத்திலும், முதன் முறையாக பாடியுள்ளனர்.
தற்போது இந்தப் பட்டியலில் சூர்யாவும் இணைந்திருக்கிறார். இதில் சற்று வித்தியாசமாக பிரபல நிறுவனத்தின் விளம்பரத்துக்காக பாடியுள்ளார். சூர்யா பாடியதை வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் பாடகர் கார்த்திக்.
சிறந்த நடிகன் என்று தன்னை நிரூபித்து விட்ட சூர்யா, அண்மையில் வெளியான 'சிங்கம்-2' படத்தை தன்னுடைய '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் வெளியிட்டு, தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment