29th of August 2013
சென்னை::தனுஷ் படத்தில் நடிக்க சிம்புவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. தனுஷ், சிம்பு இருவரையும் போட்டி நடிகர்களாக கோலிவுட் வட்டாரங்கள் சித்தரிக்கின்றன. அதற்கேற்ப அவர்கள் நடிக்கும் படங்களில் சில சமயம் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கிக்கொள்வதுபோல் வசனங்களை இயக்குனர்கள் வைக்கின்றனர்.
தனுஷின் ‘ஒய் திஸ் கொல வெறி' பாடல் ஹிட்டானபோது ‘லவ் ஆன்த்தம்' என்ற ஆல்பத்தை உருவாக்கினார் சிம்பு. இவையெல்லாமே ஒருவரையொருவர் நேரில் சந்திக்காத போது உருவாக்கப்பட்ட சூழல்கள். ஆனால் வெளிநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சியொன்றில் இருவரும் ஒரே மேடையில் ஜோடியாக தோன்றி பாட்டு பாடினார்கள். தாங்கள் நண்பர்களாக இருப்பதாகவும், எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது, விரோதம் எதுவும் இல்லை. மற்றவர்கள்தான் அதுபோல் சித்தரிக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனுஷ் தயாரிக்கும் ‘காக்கா முட்டை' படத்தில் சிம்புவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை மணிகண்டன் டைரக்ட் செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment