எம்.ஜி.ஆரை வாங்கினார் விஷால்!!!

23rd of August 2013
சென்னை::கலகலப்பு முடிந்த கையோடு சுந்தர்.சி. ஆரம்பித்த படம்
அதே போல எம்.ஜி-.ஆரையும் விஷால் பிலிம் பேக்டரி தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கிவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மும்முரமாக செய்ய ஆரம்பித்து விட்டார் விஷால். பட்டத்துயானை கீழே கவிழ்த்து விட்டதுல அதிர்ச்சி அடைந்திருக்கும் விஷால், எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
 
மதகஜராஜா (எம்.ஜி.ஆர்). விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்தார்கள். விஜய் ஆண்டனி மியூசிக். படத்தை மளமளன்னு முடித்தார் சுந்தர்.சி. ஆனாலும் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதும் அவர்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு சுந்தர்.சி ‘‘தீயா வேலை செய்யணும் குமார்’’-ரை டைரக்ட் செய்து அதையும் ஹிட்டாக்கினார். விஷால் ‘‘பட்டத்து யானை’’யில் நடித்து அதுவும் ரிலீசாகிவிட்டது. பட்டத்து யானையின் சென்னை விநியோக உரிமையை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கியது.

Comments