சிம்ரன் நடித்த வேடத்தில் அசின், உடன் ஸ்ருதி!!!

19th of August 2013
சென்னை::சஞ்சய் லீலா பன்சாலி முருகதாஸின் ரமணா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். கப்பார் என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் ஹீரோ அக்ஷய் குமார்.
 
கப்பாரில் தமன்னாவை நடிக்க வைக்கவே விரும்பினர். அந்த நேரத்தில் வெளியானது ஸ்ருதிஹாசனின் ராமையா வஸ்தாவையாவும், டி டே யும். அதில் ஸ்ருதியின் திறமையைப் பார்த்தவர்கள் தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தனர்.
 
ரமணாவில் சிம்ரன் நடித்த சின்ன வேடத்தில் அசின் நடிக்கிறார். படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
அதேபோல் 2007 ல் வெளியான வெல்கம் படத்தின் சீக்வெலை வெல்கம் பேக் என்ற பெயரில் எடுக்கிறார்கள். வெல்கம் படத்தில் அக்ஷய் ஹீரோ, அதன் சீக்வெல் வெல்கம் பேக்கில் அக்ஷய்க்குப் பதில் ஜான் ஆபிரஹாமை கமிட் செய்திருக்கிறார்கள். அவருக்கு ஜோடியாக நடிக்க அசினை கேட்டிருந்தனர். கப்பார் படத்தைப் போலவே ராமையா வஸ்தாவையா மற்றும் டி டே படங்களைப் பார்த்த வெல்கம் பேக்கின் தயாரிப்பாளர்கள் அசினுக்குப் பதில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
தமன்னா, அசினுக்கு போக வேண்டிய வாய்ப்புகள் ஸ்ருதியின் திறமை காரணமாக அவர் பக்கம் சாய்ந்திருக்கிறது.
 
ஆக, ஸ்ருதி காட்டில் இப்போது அடைமழை.

Comments