ஹீரோயின் சான்ஸ் கொடுங்க: கவர்ச்சி நடிகை சஞ்சனாசிங் கேட்கிறார்!!!

20th of August 2013
சென்னை::கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனாசிங் ரேணிகுண்டா படத்தில் குணசித்திர நடிகையாக அறிமுகமானார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடிச்சு அப்படியே ஹீரோயின் ஆயிடலாமுன்னு நினைச்சார். ஆனால் அவர் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல. குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுறாங்க. அல்லது கிளாமர் ரோல்ல நடிக்க கூப்பிடுறாங்க. இதனால சஞ்சனாசிங் ரொம்ப வருத்தத்துல இருக்கார். அவர் கவலையோடு இப்படி கூறியிருக்கிறார்.

"ஹீரோயின் மாதிரி அழகா இருக்கீங்க ஆறடி உசரத்துல இருக்கீங்க அப்புறம் ஏன் சின்ன சின்ன கேரக்டர்ல நடிக்குறீங்க. ஹீரோயினா நடிக்கலாமேன்னு எல்லோரும் சொல்றாங்க. அப்படிச் சொல்றவங்ககூட சின்ன கேரக்டர்லதான் நடிக்க கூப்பிடுறாங்க. அறிமுகமாகுறப்பவே ஹீரோயினாயிருக்கணும். அப்போ தப்பு பண்ணிட்டு இப்போ முழிக்கிறேன். இப்போ நாலஞ்சு படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். சில படங்கள்ல செகண்ட் ஹீரோயினா நடிக்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோட இருக்கேன். சீக்கிரமே ஹீரோயினா நடிப்பேன்" என்கிறார்.

Comments